/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காலநிலையில் ஏற்பட்ட மாற்றம்; தேயிலையில் கொப்புள நோய் தாக்கம்
/
காலநிலையில் ஏற்பட்ட மாற்றம்; தேயிலையில் கொப்புள நோய் தாக்கம்
காலநிலையில் ஏற்பட்ட மாற்றம்; தேயிலையில் கொப்புள நோய் தாக்கம்
காலநிலையில் ஏற்பட்ட மாற்றம்; தேயிலையில் கொப்புள நோய் தாக்கம்
ADDED : டிச 29, 2024 11:15 PM

பந்தலுார்; பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில்,தேயிலை செடிகளில் கொப்புள நோய் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாளாக தேயிலை விவசாயம் உள்ளது. தேயிலையை தாக்கும், 507 வகையான பூஞ்சாண நோய்கள் கண்டறியப்பட்டுள்ளன. வேர், தண்டு, இலை பகுதிகளை தாக்கும், 15 வகை பூஞ்சாண நோய்களால் தேயிலை விவசாயம் பாதிக்கப்படுகிறது. இதில், 'எக்ஸோபெசிடியம் வெக்ஸ்சன்ஸ்' எனப்படும், கொப்புள நோய் பூஞ்சாணம் தாக்குதலால், 50 சதவீதம் மகசூல் இழப்பு ஏற்படுகிறது.
அதில், கூடலுார், பந்தலுார் பகுதி தேயிலை தோட்டங்களில், கொப்புள நோய் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தேயிலை விவசாய பயிற்சியாளர் அன்பரசன் கூறுகையில், ''சூரிய ஒளி குறைவு; மேக மூட்டம்; வாரத்தில், 2 முதல் 10 செ.மீ., வரை மழையளவு; 17 முதல் 23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை; 60 முதல் 100 சதவீதம் வரை காற்றின் ஈரப்பதம் உள்ள போதும், இலைபரப்பில், 12 மணி நேரத்திற்கு மேல் ஈரப்பதம் இருந்தால் இந்நோய் பரவும்.
தோட்டங்களில் உள்ள நிழல் மரக்கிளைகளை அகற்றி வெயில் படும் வகையில், பரவ செய்து கட்டுப்படுத்தலாம்,'' என்றார்.

