/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாறிப்போன மைல்கல்; சுற்றுலா பயணிகள் குழப்பம்
/
மாறிப்போன மைல்கல்; சுற்றுலா பயணிகள் குழப்பம்
ADDED : ஜன 08, 2025 10:31 PM

குன்னுார்; குன்னுார் மவுன்ட் ரோட்டில், இடம் மாற்றி வைத்த மைல் கற்கள் காரணமாக, சுற்றுலா பயணிகள்குழப்பமடைகின்றனர்.
குன்னுார் மவுன்ட் ரோடு, மாநில நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலையில், ஒய்.எம்.சி.ஏ., அருகே அமைக்கப்பட்ட மைல் கல் ஒன்றில், 'குன்னுார் ஒரு கி.மீ ; சிம்ஸ் பார்க் 2 கி.மீ,' என, நெடுஞ்சாலை துறை சார்பில் எழுதப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த பணியின் போது, இந்த மைல் கல் அகற்றப்பட்டு, இடம் மாற்றி வைக்கப்பட்டுள்ளது.
இதனால், 'சிம்ஸ் பார்க் சென்று குன்னுார் வரும் சுற்றுலா பயணிகள் இதனை பார்த்து, மீண்டும் சிம்ஸ் பார்க் செல்கிறதா இந்த சாலை,' என, குழப்பமடைகின்றனர். இவ்வழியாக, சிம்ஸ்பார்க் செல்லும் சுற்றுலா பயணிகள் திணறுகின்றனர்.
எனவே, நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு செய்து, மைல் கல்லை சரியான பகுதியில் வைக்க வேண்டும்.

