/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புதுப்பொலிவு பெறும் வண்ண மீன் காட்சியகம்
/
புதுப்பொலிவு பெறும் வண்ண மீன் காட்சியகம்
ADDED : ஜன 16, 2025 03:56 AM

பாலக்காடு : பாலக்காடு அருகேயுள்ள, மலம்புழா வண்ணமீன் காட்சியகம் புதுப்பிக்கும் பணிகள் நடக்கிறது.
கேரள மாநிலம், பாலக்காடு மலம்புழா பூங்கா அருகே உள்ளது, 60 ஆண்டு பழமை வாய்ந்த வண்ணமீன் காட்சியகம்.
மீன்வள துறையின் பராமரிப்பில் உள்ள காட்சியகத்தில், தற்போது சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மீன்வள துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வண்ணமீன் காட்சியகம் புதுப்பிக்கும் பணிகள், பிப்., மாதம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, வண்ணமீன் காட்சியகத்தினுள் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது. வெளிப்பகுதியில், வர்ணம் பூசுவது, பூந்தோட்டம் மற்றும் அலங்கார விளக்குகள் அமைப்பது போன்றவை, சீரமைப்பு பணிகளின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படுகிறது. மேலும், முன்பகுதியில் செயற்கை நீர் ஊற்று அமைத்து அழகுபடுத்தப்படுகிறது.
அங்குள்ள குளத்திலும் சீரமைப்பு பணிகளுக்கு பின், பல வண்ண மீன்களை பராமரிக்க, 90 லட்சம் ரூபாய் செலவில் நவீன மயமாக்கப்படுகிறது.
இந்த வண்ணமீன் காட்சியகம் சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த பொழுதுபோக்கு மற்றும் மீன்கள் குறித்த பொது அறிவை வளர்க்கும் என்பது உறுதி. இவ்வாறு, அவர் கூறினார்.

