ADDED : மார் 05, 2026 05:16 AM
பந்தலுார்: நீலகிரி மாவட்டத்தை ஒட்டிய வயநாடு பகுதியில், பசு ஒன்று மூன்று கன்றுகளை ஈன்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
கேரளா மாநிலம் வயநாடு மானந்தவாடி அருகே, அயனி காட்டில் என்ற பகுதியை சேர்ந்தவர் லில்லி மேத்யூ. இவர் மாட்டுப்பண்ணை வைத்துள்ள நிலையில், இவர் வளர்த்து வரும் ஒரு பசு முதல் பிரசவத்தில் மூன்று கன்றுகளை ஈன்றுள்ளது. இதனை கேள்விப்பட்ட அருகில் கால்நடை வளர்ப்புகள் மற்றும் பொதுமக்கள், இவரது பண்ணைக்கு வந்து மூன்று பெண் கன்று குட்டிகள் மற்றும் கலப்பின வகை தாய்பசுவை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
லில்லி மேத்யூ கூறுகையில், ''எனது பண்ணையில், 150 பசுக்களை வளர்த்து வருகிறேன். இவை அனைத்தும் ஒரு கன்றுகளை மட்டுமே ஈன்ற நிலையில், ஒரு பசு மட்டும் முதல் பிரசவத்தில் மூன்று கன்றுகளை ஈன்றுள்ளது, மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது. எனது பணியை பாராட்டி கேரளா மாநில அரசு விருது வழங்கிய நிலையில், இது போன்ற ஒரு மகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது,'' என்றார்.
