/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சேதமடைந்த நகராட்சி கழிப்பிடம்; சுற்றுலா பயணிகள் அதிருப்தி
/
சேதமடைந்த நகராட்சி கழிப்பிடம்; சுற்றுலா பயணிகள் அதிருப்தி
சேதமடைந்த நகராட்சி கழிப்பிடம்; சுற்றுலா பயணிகள் அதிருப்தி
சேதமடைந்த நகராட்சி கழிப்பிடம்; சுற்றுலா பயணிகள் அதிருப்தி
ADDED : டிச 23, 2024 10:27 PM

கூடலுார்,; கூடலுார் -ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில், சேதமடைந்த நகராட்சி கழிப்பிடம் பராமரிப்பின்றி பூட்டி கிடப்பதால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு கேரளா, கர்நாடகா சுற்றுலா பயணிகள், கூடலுார் வழியாக அதிக அளவில் வந்து செல்கின்றனர். இதனால், இந்த சாலையில் அதிக வாகன போக்குவரத்து இருக்கும். இவ்வழியாக, ஊட்டி சென்று வரும், சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் வகையில், சில்வர்கிளவுட் வன சோதனைச்சாவடி அருகே, நகராட்சி சார்பில், இரண்டு கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளது.
அதில், ஒரு கழிப்பிடத்தின் மீது, சில ஆண்டுகளுக்கு முன் மரம் விழுந்து சேதமடைந்தது, பயன்படுத்த முடியாமல் பூட்டி கிடக்கிறது. மற்றொரு கழிப்பிடம் மீது சில மாதங்களுக்கு முன் வாகனம் மோதி சேதமடைந்தது. இதனால், அந்த கழிப்பிடமும் பராமரிப்பின்றி பூட்டிய நிலையில் உள்ளது. சுற்றுலா பயணிகள் கழிப்பிட வசதியின்றி சிரமப்பட்டு வருகின்றனர்.
சுற்றுலா பயணிகள் கூறுகையில், 'குளிர் பிரதேசமான ஊட்டியில் இருந்து, கூடலுார் வந்து சேர, 2 மணி நேரம் ஆகிறது.
இச்சாலையில் நீண்ட துாரம் பயணிக்கும், சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் வகையில், சில்வர் கிளவுட் அருகே, நகராட்சி சார்பில் கட்டப்பட்ட இரண்டு கழிப்பிடங்களும், சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே, சேதமடைந்த கழிப்பிடங்களை, நகராட்சி நிர்வாகம் சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்,' என்றனர்.