/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மது போதையில் மோதல்; நண்பரை கொன்றவருக்கு வலை
/
மது போதையில் மோதல்; நண்பரை கொன்றவருக்கு வலை
ADDED : செப் 04, 2025 10:40 PM
பாலக்காடு; பாலக்காடு அருகே, மது போதையில் ஏற்பட்ட மோதலில், நண்பரை வெட்டி கொலை செய்தவரை போலீசார் தேடுகின்றனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடிபுதூர் ஆனக்கல்லு பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி மணிகண்டன், 27. அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் ஈஸ்வரன், 28.
இந்நிலையில், நேற்று மதியம் இருவரும் மது அருந்தியுள்ளனர். போதையில் இவர்களிடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த ஈஸ்வரன் கையில் வைத்திருந்த அரிவாளால் மணிகண்டனை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினார். படுகாயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அகளி போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், நண்பரை கொலை செய்த ஈஸ்வரனை தேடி வருகின்றனர்.