/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு சாகும் வரை ஆயுள்
/
பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு சாகும் வரை ஆயுள்
பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு சாகும் வரை ஆயுள்
பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு சாகும் வரை ஆயுள்
ADDED : அக் 15, 2024 10:00 PM

ஊட்டி : பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து, ஊட்டி மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
குன்னுார் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளிக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தொழிலாளியின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். அவர் தனது இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், கடந்த, 2022ம் ஆண்டு இரண்டாவது குழந்தை பள்ளிக்கு சென்ற நிலையில், வீட்டில் இருந்த முதல் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து வெளியில் கூறக்கூடாது என்று மிரட்டியுள்ளார்.
உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமி, குன்னுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குன்னுார் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து, போக்சோ சட்டத்தில் அவரை கைது செய்தனர். இந்த வழக்கு ஊட்டி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
அதில், மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி லிங்கம் உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில், 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல்செந்தில் குமார் ஆஜரானார்.