/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காட்டேரி அணை அருகே வாகனத்தில் அடிபட்டு இறந்த புனுகு பூனை
/
காட்டேரி அணை அருகே வாகனத்தில் அடிபட்டு இறந்த புனுகு பூனை
காட்டேரி அணை அருகே வாகனத்தில் அடிபட்டு இறந்த புனுகு பூனை
காட்டேரி அணை அருகே வாகனத்தில் அடிபட்டு இறந்த புனுகு பூனை
ADDED : ஆக 03, 2025 08:29 PM
குன்னுார்; குன்னுார் காட்டேரி அணை அருகே வாகனத்தில் அடிபட்டு இருந்த புனுகு பூனை உடலை வனத்துறையினர் பிரேத பரிசோதனை செய்தனர்.
குன்னுார் காட்டேரி அணை அருகே சாலையில் வாகனத்தில் அடிபட்ட புனுகு பூனை இறந்து கிடந்தது. இது தொடர்பாக, அவ்வழியாக சென்ற வனவிலங்கு ஆர்வலர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
குந்தா ரேஞ்சர் செல்வகுமார் தலைமையில் வனத்துறையினர் அங்கு சென்று புனுகு பூனை உடலை மீட்டனர். சேலாஸ் கால்நடை டாக்டர் குழுவினர் பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர்.
வனத்துறையினர் கூறுகையில்,'இந்த பகுதிகளில், வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் மித வேகத்தில் வாகனங்களை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கு அறிவிப்பு போர்டுகளும் வைக்கப்பட்டுள்ளன. எனினும், சிலர் அதிவேகத்தில் வருவதால், அரிய வகை சிறிய வன விலங்குள் பலியாகும் நிலை தொடர்கிறது.
இதற்கு காரணமான, வாகன உரிமையாளர்கள் குறித்து விசாரணை நடத்தி அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

