ADDED : மார் 02, 2024 11:10 PM

கூடலுார்;-கட்டுமான பொருட்களை எடுத்து வந்த லாரி முன் வன ஊழியர் அமர்ந்து தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர் ஓவேலி காந்திநகர் பகுதியில், சாலை சீரமைப்பு பணிக்காக, நேற்று, காலை சில லாரிகள், ஜல்லி கற்கள் ஏற்றி வந்தது.
வனக்காப்பாளர் அருண்குமார், அப்பகுதியில், சாலையில் வனத்துறைக்கு ஒதுக்கப்பட்ட இடம் உள்ளது. எனவே, சாலை அமைக்க அனுமதி இல்லை. சாலை சீரமைப்பு தொடர்பாக அதிகாரிகள் உத்தரவும் இல்லை. லாரி அப்பகுதிக்கு செல்வதை அனுமதிக்க முடியாது. என, லாரி ஓட்டுனர்களிடம் தெரிவித்துள்ளார்.
அதனை ஏற்காமல் லாரி செல்ல முயன்றதால், வனக்காப்பாளர் சாலையில் லாரி முன் அமர்ந்து தடுத்தார். காந்திநகர் மக்கள் லாரியை விடும்படி கூறினர். அவர், மறுக்கவே, மக்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள், உத்தரவுபடி பிரச்னைக்கு சுமூக தீர்வு ஏற்பட்டது. தொடர்ந்து, லாரிகள் செல்ல அனு மதிக்கப்பட்டன. இச்சம்பவத்தால், அங்கு பரப்பரப்பு ஏற்பட்டது.

