/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சமூக விரோதிகளால் தீயில் கருகி வரும் வனம்
/
சமூக விரோதிகளால் தீயில் கருகி வரும் வனம்
ADDED : பிப் 12, 2024 09:13 PM

பந்தலுார்:பந்தலுார் பகுதியில், கோடைகாலத்தில் ஏற்படும் காட்டு தீயை கட்டுப்படுத்த, தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
எனினும், நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று வரை, சேரம்பாடி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட, மழவன் சேரம்பாடி பகுதியில் காட்டு தீ பரவியது.அதில், வனப்பகுதி முழுமையாக எரிந்து சேதமடைந்ததுடன் பறவைகள், ஊர்வன போன்ற உயிரினங்களும் கருகியது. அத்துடன் இந்த பகுதியில் யானைகள் அதிகளவில் முகாமிடும், நிலையில் அவற்றின் வாழ்விடங்கள் அழிந்தன.
மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், மறுபக்க, சமூக விரோதிகள் வனங்களுக்கு தீ வைப்பதும் தொடர்வது வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, வனத்துறையில் கூடுதலாக தற்காலிக ஊழியர்களை பணியில் அமர்த்தி வனம் அழிவதை தடுக்க வேண்டும்.