/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு பள்ளிக்கு கலையரங்கம் கட்டி தந்த முன்னாள் மாணவர்
/
அரசு பள்ளிக்கு கலையரங்கம் கட்டி தந்த முன்னாள் மாணவர்
அரசு பள்ளிக்கு கலையரங்கம் கட்டி தந்த முன்னாள் மாணவர்
அரசு பள்ளிக்கு கலையரங்கம் கட்டி தந்த முன்னாள் மாணவர்
ADDED : ஜன 25, 2024 12:10 AM

கருமத்தம்பட்டி : அரசு பள்ளிக்கு கலையரங்கம் கட்டி தந்த முன்னாள் மாணவருக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.
கருமத்தம்பட்டி அடுத்த மோப்பிரிபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்டது கணபதிபாளையம். இங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில், 150 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவரான முருகேசன், தான் படித்த பள்ளி மற்றும் மாணவ, மாணவியர் பயன் பெறும் வகையில், 1.50 லட்சம் ரூபாய் செலவில், அவரது தங்கை மணிமேகலை நினைவாக கலையரங்கம் கட்டி ஒப்படைத்துள்ளார்.
பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலையரங்கத்தை, பேரூராட்சி தலைவர் சசிக்குமார் திறந்து வைத்தார். ஊர் முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.