/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோத்தகிரி நேரு பூங்காவில் சிறுவர்கள் கூட்டம்
/
கோத்தகிரி நேரு பூங்காவில் சிறுவர்கள் கூட்டம்
ADDED : அக் 30, 2024 08:06 PM
கோத்தகிரி: கோத்தகிரி நேரு பூங்காவினுள் அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் சிறுவர் கூட்டம் அதிகரித்துள்ளது.
கோத்தகிரி நகரின் மைய பகுதியில் நேரு பூங்கா அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக காய்கறி கண்காட்சி நடத்தப்படுகிறது.
சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பூங்காவுக்கு வருகை புரிகின்றனர். புல்தரை, நடைபாரை இருக்கைகள் என, பூங்கா பொலிவுப்படுத்தப்பட்டுள்ளது. இங்குள்ள சிறுவர் பூங்காவில், ஊஞ்சல், ராட்டினம் மற்றும் சறுக்கு விளையாட்டு அம்சங்கள் நிறைந்துள்ளதால், சிறுவர்கள் விளையாடுவதில், ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தீபாவளி தொடர் விடுமுறையில் பூங்கா களைக்கட்டும் என்ற நிலையில், இதமான காலநிலை நிலவிய நிலையில் சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்தனர்.

