/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையோர புல்வெளியில் உலா வரும் யானை கூட்டம்
/
சாலையோர புல்வெளியில் உலா வரும் யானை கூட்டம்
ADDED : செப் 22, 2024 07:20 AM

பந்தலூர்: பந்தலுாரில் சுற்றித்திரியும் யானை கூட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் வனக்கோட்ட எல்லைக்கு உட்பட்ட, பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகள் தமிழக, கேரளா மற்றும் -கர்நாடகா மாநிலங்களின் யானைகள் வந்து செல்லும் முக்கிய வழித்தடங்களை உள்ளடக்கிய பகுதிகளாகும்.
இங்கு, யானைகள் அடிக்கடி உலா வருவதை காணமுடிகிறது. கடந்த ஒரு மாதமாக, 20க்கும் மேற்பட்ட யானைகள், குட்டிகளுடன் சாலையோர புல்வெளியில் முகாமிட்டுள்ளது.
இரவு,7:00 மணிக்கு மேல் யானைகள் ஊருக்குள் புகுந்து விளைநிலங்கள், குடியிருப்புகளை சேதப்படுத்தி மனிதர்களை அச்சுறுத்தி வருகிறது. வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வனத்திற்கு விரட்டினாலும், மீண்டும் அதே பகுதிக்கு உலா வருவதை வழக்கமாக கொண்டுள்ளது.
பகல் நேரங்களில் கூட்டமாக சாலையோர புல்வெளியில் முகாமிட்டுள்ள யானைகளை அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணியர் ரசித்து செல்கின்றனர்.