/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஐயப்பன் கோவில் தேர்பவனி திரளான பக்தர்கள் பங்கேற்பு
/
ஐயப்பன் கோவில் தேர்பவனி திரளான பக்தர்கள் பங்கேற்பு
ஐயப்பன் கோவில் தேர்பவனி திரளான பக்தர்கள் பங்கேற்பு
ஐயப்பன் கோவில் தேர்பவனி திரளான பக்தர்கள் பங்கேற்பு
ADDED : டிச 23, 2024 05:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி : ஊட்டி ஐயப்பன் கோவில் தேர்பவனி நிகழ்ச்சி நடந்தது.
ஊட்டியில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவில் ஆண்டு விழா மற்றும், 70வது ஆண்டு தேர் பவனி நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. எஸ்.பி., நிஷா பங்கேற்று தேர் பவனியை துவக்கி வைத்தார். தொடர்ந்து, தேர்பவனி ஊட்டி நகரில் உள்ள பூங்கா சாலை, கோடப்பமந்து, வண்ணாரப்பேட்டை, சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, லோயர் பஜார், மாரியம்மன் கோவில் வழியாக மீண்டும் ஐயப்பன் கோவிலை சென்றடைந்தது. செண்டை மேளம் முழங்க ஐயப்ப சுவாமி நகரை வலம் வந்தார். இந்நிலையில், நேற்று ஊட்டி பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் அன்னதான விழா நடந்தது.