/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மூவுலகரசியம்மன் தேர் பவனி திரளான பக்தர்கள் பங்கேற்பு
/
மூவுலகரசியம்மன் தேர் பவனி திரளான பக்தர்கள் பங்கேற்பு
மூவுலகரசியம்மன் தேர் பவனி திரளான பக்தர்கள் பங்கேற்பு
மூவுலகரசியம்மன் தேர் பவனி திரளான பக்தர்கள் பங்கேற்பு
ADDED : மே 07, 2025 01:51 AM

ஊட்டி: ஊட்டி காந்தளில் மூவுலகரசியம்மன் தேர் பவனி நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடந்தது.
ஊட்டியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் ஏப்., இரண்டாவது வாரம் வரை பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களால் உபயம் நிகழ்ச்சி சிறப்பாக நடக்கிறது. தேர்பவனி நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது.
இதை தொடர்ந்து, ஊட்டி காந்தளில் உள்ள மூவுலகரசியம்மன் கோவிலில் கடந்த மூன்று வாரங்களாக உபயதாரர்களின் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, நடந்த தேர் பவனி நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.
காந்தளின் முக்கிய வீதிகளில் சென்ற மூவுலகரசி அம்மனுக்கு வழிநெடுக மக்கள் பூஜை செய்து வழிபட்டனர். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். அன்னதான நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை, அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.