/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பத்ர காளியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்; திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்

ADDED : மே 07, 2025 01:44 AM

மஞ்சூர் : மஞ்சூர் கரியமலை கிராமத்தில் பத்ரகாளி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.
மஞ்சூர் அருகே உள்ள கரியமலை கிராமத்தில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலுக்கு குடமுழுக்கு நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர்.
அதன்படி, கடந்த சில மாதங்களாக கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கோபுரங்கள் பொலிவுப்படுத்தப்பட்டது. திருப்பணிகள் நிறைவடைந்ததால், மஹா கும்பாபிஷேகத்தை ஒட்டி பல்வேறு ஹோமங்கள் மற்றும் பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள், 108 குடங்களில் கொண்டுவரப்பட்ட புனித நீரை கோவில் கலசங்களில் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
அப்போது கோவிலை சுற்றிலும் இருந்த கிராம மக்கள், 'ஓம் சக்தி பராசக்தி' என பக்தி பரவசத்துடன் கோஷங்களை எழுப்பினர். பின் , அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்களுடன் அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை , மஹா தீபாராதனை நடந்தது.
விழாவை ஒட்டி, 14 ஊர்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
படுகரின மக்களின் பாரம்பரிய நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை ஊர் தலைவர் மணிகண்டன், பொருளாளர் ரவி, கோகுல கண்ணன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.