/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பொங்கல் விழாவில் திரளான மக்கள் பங்கேற்பு
/
பொங்கல் விழாவில் திரளான மக்கள் பங்கேற்பு
ADDED : ஜன 16, 2025 10:42 PM

பந்தலுார், ; பந்தலுாரில் நடந்த பொங்கல் விழா நிகழ்ச்சியில் திரளான மக்கள் பங்கேற்றனர்.
பந்தலுாரில் செயல்பட்டு வரும் ஸ்ரீ விவேகானந்தா இளைஞர் மன்றம் சார்பில் ஆண்டு தோறும் ஜன., 16ல் பொங்கல் விழா நடத்தப்படுகிறது.
நேற்று காலை நடந்த விழாவில், பாரத அன்னைக்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, பெண்கள் பங்கேற்று பொங்கல் வைத்தனர். அதனை தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிக்கு மன்ற ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., ஜெயசீலன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.
ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி மனோஜ்குமார், ஸ்ரீ மதுரை ஊராட்சி முன்னாள் தலைவர் சுனில்குமார், பொறியாளர் குப்புராஜ் ஆகியோர் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. தொடர்ந்து, நடன நிகழ்ச்சிகள் மற்றும் சிறுவர்கள், பெரியவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் காளிமுத்து, ராமானுஜம், அசோக்குமார், தியாகராஜா, சிவராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மன்ற பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், மகளிர் அணையினர் செய்திருந்தனர்.