/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வீட்டு வளாகத்தில் நுழைந்த சிறுத்தை; வளர்ப்பு நாயை துாக்கி சென்றதால் அச்சம்

ADDED : ஜன 02, 2025 10:06 PM

ஊட்டி; ஊட்டி தாவரவியல் பூங்கா அருகே, கிளன்ராக் பகுதியில் வீட்டு வளாகத்தில் நுழைந்த சிறுத்தை வளர்ப்பு நாயை கொன்று துாக்கி சென்றதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அருகில் கிளன்ராக் பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதியில் வசிக்கும் சந்திரசேகர் என்பவருடைய வீட்டின் வளாக பகுதியினுள் இரவில் சிறுத்தை நுழைந்து வளர்ப்பு நாயை கொன்று துாக்கி சென்றது. தகவலின் பேரில், ரேஞ்சர் சசிகுமார் உத்தரவின் படி, வன ஊழியர்கள் சம்பவ பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்பகுதிகளில், 'சிறுத்தையை கண்காணிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'என, உறுதி அளித்தனர்.
பொது மக்கள் கூறுகையில், 'கிளன்ராக் பகுதியில் ஆங்காங்கே அதிகரித்துள்ள சாலையோர புதர்களால் வனவிலங்குகள் தஞ்சம் அடைவது அதிகரித்துள்ளது.
இப்பகுதியில் ஒரு கான்வென்ட் பள்ளி உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும்,' என்றனர்.