/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேயிலை தோட்ட பாறையில் ஓய்வெடுத்த சிறுத்தையால் அச்சம்
/
தேயிலை தோட்ட பாறையில் ஓய்வெடுத்த சிறுத்தையால் அச்சம்
தேயிலை தோட்ட பாறையில் ஓய்வெடுத்த சிறுத்தையால் அச்சம்
தேயிலை தோட்ட பாறையில் ஓய்வெடுத்த சிறுத்தையால் அச்சம்
ADDED : ஜன 12, 2025 10:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்; குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், உலிக்கல் புதுக்காடு பகுதியில், நேற்று முன்தினம் தேயிலை தோட்டத்தில் உள்ள பாறையின் மீது, சிறுத்தை நீண்ட நேரம் அமர்ந்து ஓய்வெடுத்து சென்றது. இதனை அப்பகுதி மக்கள் 'வீடியோ' எடுத்துள்ளனர்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. வன துறையினர் கண்காணித்து வருகின்றனர். தோட்ட தொழிலாளர்கள், தேயிலை பறிக்க செல்ல முடியாமல் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் கூறுகையில், 'தனியாக யாரும் தேயிலை தோட்டத்திற்குள் செல்ல வேண்டாம்,' என, அறிவுறுத்தினர்.