/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வெளி மார்க்கெட்டில் மது விற்ற ஒருவர் கைது
/
வெளி மார்க்கெட்டில் மது விற்ற ஒருவர் கைது
ADDED : செப் 18, 2024 08:50 PM
பந்தலுார் : பந்தலுார் பஜாரில் கூடுதல் விலைக்கு விற்பதற்காக, சரக்கு பதுக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
பந்தலுார் பஜாரில் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடை விடுமுறை என்பதால், கூடுதல் விலைக்கு ஒருவர் சரக்கு விற்பனை செய்வதாக, தனி பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருக்கேஸ்வரன், மோகன், தலைமை காவலர் சந்திரன் ஆகியோருக்கு தகவல் கிடைத்தது. போலீஸ் குழுவினர், பந்தலுார் பஜார் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, டாஸ்மாக் கடையின் பின் பகுதியில் உள்ள புதரில் ஒருவர் சாக்கு பையில் இருந்து, சரக்கு எடுத்து வந்து விற்பனை செய்வதை கண்டுபிடித்தனர்.
அவரை விசாரணை செய்ததில்,'அவர், திருப்பூர் அருகே பல்லடம் பகுதியை சேர்ந்த கோபிநாதன் 43, என்பதும், அரசு விடுமுறை நாட்களில் பந்தலுார் பகுதிக்கு வந்து சரக்குகளை மொத்தமாக வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தார்,' என்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து, கோபிநாதனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த சரக்கு பாட்டில்களை பறிமுதல் செய்து தேவாலா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.