/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தரமான பசுந்தேயிலைக்கு நவீன இலை பறிக்கும் இயந்திரம் ;அங்கத்தினர்கள் ஒத்துழைப்பு அவசியம்
/
தரமான பசுந்தேயிலைக்கு நவீன இலை பறிக்கும் இயந்திரம் ;அங்கத்தினர்கள் ஒத்துழைப்பு அவசியம்
தரமான பசுந்தேயிலைக்கு நவீன இலை பறிக்கும் இயந்திரம் ;அங்கத்தினர்கள் ஒத்துழைப்பு அவசியம்
தரமான பசுந்தேயிலைக்கு நவீன இலை பறிக்கும் இயந்திரம் ;அங்கத்தினர்கள் ஒத்துழைப்பு அவசியம்
ADDED : ஜன 28, 2024 11:41 PM
ஊட்டி:விவசாயிகளிடமிருந்து தரமான பசுந்தேயிலை பெற, நவீன இலை பறிக்கும் இயந்திரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில், 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில், 30 ஆயிரம் பேர் அங்கத்தினர்களாக உள்ளனர். தங்களது தோட்டத்தில் பறிக்கும் பசுந்தேயிலையை அந்தந்த கூட்டுறவு தொழிற்சாலைக்கு வினியோகித்து வருகின்றனர். குறிப்பாக, கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளை மேம்படுத்த நபார்டு வங்கி இங்குள்ள, 15 தொழிற்சாலைக்கு பல கோடி ரூபாய் நிதி அளித்துள்ளது. அதே சமயத்தில், கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைக்கு தரமற்ற இலை வினியோகிப்பதற்கு தேயிலை தோட்ட வேலைக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணம் என, ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஒத்துழைப்பு தேவை
அங்கத்தினர்கள் நலன் காக்கவும், கொள்முதல் செய்யும் இலைக்கு நல்ல விலை பெற்று தர தொழிற்சாலை நிர்வாகம் கடமைப்பட்டுள்ளது.
அதன்படி, விவசாயிகள், குச்சி, செங்காம்பு, கரட்டை இலைகளை தவிர்த்து தரமான பசுந்தேயிலையை வழங்கி ஒத்துழைக்க வேண்டும். என, கூட்டுறவு தொழிற்சாலைகள் சார்பில் கொள்முதல் மையங்களில், பிளக்ஸ் போர்டு வைத்து வழங்க வேண்டிய பசுந்தேயிலை, வழங்க கூடாத பசுந்தேயிலை குறித்து படத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். அதிகாரிகள் கூறுகையில், 'குன்னூர் இன்கோ சர்வ்( கூட்டுறவு இணையம்) உத்தரவின் பேரில், விவசாயிகளிடமிருந்து தரமான இலை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தரமான முறையில் இலை பறிக்க நவீன இயந்திரம் வழங்க இருப்பதாக சுற்றறிக்கை மூலம் விவசாயிகளுக்கு ஏற்கனவே தெரியப்படுத்தப்பட்டுள்ளது. தேவைப்படும் விவசாயிகள் அந்தந்த தொழிற்சாலை மூலம் பெற்றுகொள்ளலாம். என்றார்.