தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஓடிக்கொண்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்து சேதம்

ஓடிக்கொண்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்து சேதம்

ஓடிக்கொண்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்து சேதம்


ADDED : டிச 24, 2024 10:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 24, 2024 10:43 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாலக்காடு; பாலக்காடு அருகே, ஓடிக்கொண்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், சித்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜோதிஷ், 35. இவர், நேற்று காலை, 10:45 மணிக்கு, தனது காரில் மணலி பகுதியில் இருந்து, திருவாலத்தூர் சென்று கொண்டிருந்தார்.

பாலக்காடு ஸ்டேடியம் பைபாஸ் ரோட்டில் சென்ற போது, காரின் முன்பக்கத்தில் இருந்து புகை வருவதை கண்ட அவர் காரை விட்டு இறங்கினார். இதையடுத்து கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதைக் கண்ட அப்பகுதி மக்களும், தகவல் அறிந்து வந்த பாலக்காடு டவுன் தெற்கு போலீசாரும் இணைந்து, தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். சம்பவத்தில் கார் முழுமையாக சோதமடைந்தது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காரின் பேட்டரி வயரில் என்பட்ட மின் கசிவால், தீப்பிடித்து எரிந்ததாக அதிகாரிகள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us