/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நிழற்குடையில் ஒட்டப்படும் போஸ்டர் கண்டுகொள்ளாத நகராட்சி
/
நிழற்குடையில் ஒட்டப்படும் போஸ்டர் கண்டுகொள்ளாத நகராட்சி
நிழற்குடையில் ஒட்டப்படும் போஸ்டர் கண்டுகொள்ளாத நகராட்சி
நிழற்குடையில் ஒட்டப்படும் போஸ்டர் கண்டுகொள்ளாத நகராட்சி
ADDED : பிப் 05, 2024 09:38 PM

பந்தலுார்;நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பொது சுவர்கள் மற்றும் பஸ் நிலையங்களில், அரசின் உத்தரவை மீறி, போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன.
நெல்லியாளம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பந்தலுார், உப்பட்டி, தேவாலா, நாடுகாணி, நெல்லியாளம், ஏலமன்னா உள்ளிட்ட இடங்களில் பஸ் நிலையம் மற்றும் பயணிகள் நிழற்குடைகள் அமைந்துள்ளன.
நிழற்குடை மற்றும் பஸ் ஸ்டாண்டில் சுவர்களில், அரசியல் கட்சியினர் மற்றும் பொது நல அமைப்புகளை சேர்ந்தவர்கள், பல்வேறு போஸ்டர் ஒட்டி விளம்பரப்படுத்தி வருகின்றனர்.
அரசின் உத்தரவுகளை மீறி நடக்கும் விதிமீறல்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருப்பதால், அழகான சுவர்கள் அலங்கோலமாக மாறி வருகின்றன.
எனவே, நகராட்சி நிர்வாகம், தற்போது ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அகற்றவும், விதிமீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.