/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முதுமலையில் வளர்ப்பு யானைகள் அணிவகுப்பில் விழா
/
முதுமலையில் வளர்ப்பு யானைகள் அணிவகுப்பில் விழா
ADDED : ஜன 26, 2025 11:07 PM

கூடலுார்,; நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமில் நேற்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. அதில், வளர்ப்பு யானைகள் வரிசையாக அணி வகுத்து நிற்க, பாகன்கள் தேசிய கொடியுடன் அமர்ந்திருந்தனர். முன் பகுதியில் வன ஊழியர்கள் அணிவகுத்து நின்றனர். முதுமலை துணை இயக்குனர் வித்யா தேசிய கொடி ஏற்றினார். அப்போது, வன ஊழியர்கள் மரியாதை செலுத்த, வளர்ப்பு யானைகள் தும்பிக்கையை உயர்த்தி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தின.
ஊட்டி
ஊட்டியில் காங்., சார்பில் நடந்த குடியரசு தின நிகழ்ச்சிக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் தலைமை வகித்தார். சேரிங்கிராசில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநில எஸ்.டி., பிரிவு தலைவர் பிரியா நாஷ்மிகர், நகர செயலாளர் நித்ய சத்யா உட்பட பலர் பங்கேற்றனர்.
மஞ்சூர் அரசு மேல்நிலை பள்ளியில் பள்ளி தலைமையாசிரியர் சீனிவாசன் தேசிய கொடியேற்றி வைத்தார். மஞ்சூர் அருகே குந்தா துானேரி கிராமத்தில், ஊர் தலைவர் ராமன் தலைமை வகித்து தேசிய கொடி ஏற்றினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா--அத்; ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை இணைந்து, காந்தள் நகராட்சி உருது நடுநிலைப் பள்ளியில் ரத்ததான முகாம் நடத்தின. காந்தள் கிளை தலைவர் அபுதாஹிர் உட்பட பலர் பங்கேற்றனர். மஞ்சூர் அருகே கைகாட்டி பஜாரில் ஊர் தலைவர் சுப்ரமணி தலைமை வகித்து தேசிய கொடி ஏற்றினார்.
மஞ்சூர் அரசு மேல்நிலை பள்ளியில், பள்ளி தலைமையாசிரியர் சீனிவாசன் தேசிய கொடி ஏற்றினார். குந்தா துானேரி கிராமத்தில் ஊர் தலைவர் ராமன் தலைமை வகித்து தேசிய கொடி ஏற்றினார்.
குன்னுார்
குன்னுார் அருவங்காடு உதயம் நகர் சமத்துவ மக்கள் நல சங்கம் சார்பில், நடந்த குடியரசு தின விழாவில், சங்க தலைவர் பாலகிருஷ்ணன் தேசிய கொடியேற்றினார். செயலாளர் ஜெயராமன், பொருளாளர் ரிச்சர்ட், துணை செயலாளர், மாசிலாமணி ஏற்பாடுகளை செய்தனர்.
குன்னுார் கிளண்டேல் அரசு உதவி பெறும் துவக்க பள்ளியில் தலைமையாசிரியை சாந்தினி தேசிய கொடியேற்றினார். உதவி ஆசிரியர் அனிதாமணி உட்பட பெற்றோர் பங்கேற்றனர். நான்சச் உயர்நிலை பள்ளியில் தாளாளர் ஆபிரகாம் ஜோசப் தேசிய கொடியேற்றினார்.
ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் கூடுதல் கலெக்டர் சங்கீதா, தீயணைப்பு நிலையத்தில், நிலைய அலுவலர் குமார் தேசிய கொடியேற்றினர். குன்னுார் நகராட்சியில் பொறியாளர் வேலுச்சாமி தேசிய கொடியேற்றினர்.
கோத்தகிரி
கோத்தகிரி நீதிமன்றத்தில், ஜூடிசியல் மாஜிஸ்திரேட் வனிதா தேசிய கொடியேற்றினார். நீதிமன்ற அலுவலர்கள். வக்கீல்கள் பங்கேற்றனர். தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் ராஜலட்சுமி தேசிய கொடியேற்றினார். ஆர்.ஐ., கவிதா உட்பட, வி.ஏ.ஓ.,கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர். கோத்தகிரி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் தேசிய கொடியேற்றினார். எஸ்.ஐ.,கள் யுவராஜ், கண்ணன் உட்பட போலீசார் உடன் இருந்தனர். பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் ஜெயக்குமாரி தேசிய கொடியேற்றினார்.
ஒரசோலை நடுநிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் தேசிய கொடியேற்றினார். ஆசிரியை கமலா, தேச பக்தர்களின் அர்ப்பணிப்பு குறித்து மாணவர்களிடம் பேசினார். மாணவியர்கள் பிரியதர்ஷினி மற்றும் தனுசியா ஆகியோர், பாடல் மூலம், தேச ஒற்றுமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.