/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காபி பறிக்க சென்றவர் காட்டு யானை தாக்கி காயம்
/
காபி பறிக்க சென்றவர் காட்டு யானை தாக்கி காயம்
ADDED : பிப் 08, 2024 10:25 PM

கூடலுார் : கூடலுார் பாரதி நகரை சேர்ந்த, 8 பழங்குடியின தொழிலாளர்கள் தர்மகிரி அருகே உள்ள, தனியார் எஸ்டேட்டில் தங்கி காபி பறிக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இவர்கள், நேற்று காலை உணவை முடித்தனர். செம்பன், 40, மற்றும் கிருஷ்ணன், கண்ணன், வெள்ளன் ஆகிய, 4 பேர், காபி பறிக்க எஸ்டேட் பகுதியில் நடந்து சென்றனர்.
அப்போது, திடீரென வந்த காட்டு யானையை பார்த்து ஓடி உள்ளனர். எனினும், யானை தொடர்ந்து துரத்தி வந்து செம்பன் என்பவரை தாக்கியது. உடன் சென்றவர்கள் சப்த்தமிட்டு யானையை விரட்டி, செம்பனை காப்பாற்றினர்.
யானை தாக்கியதில் படுகாயமடைந்த செம்பனை, அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். பின் மேல் சிகிச்சைக்காக, ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஒவேலி, வனச்சரகர் (பொ,) இலியாஸ்மீரான், வனவர்கள் சுபேத்குமார், சுரேஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் விசாரணை செய்தனர்.
இந்த சம்பவத்தால், காபி பறிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளாகள் அச்சமடைந்துள்ளனர். வன ஊழியர்கள் ஆய்வு செய்து, யானையை கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

