/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கே.பி.ஆர்., கலை அறிவியல் கல்லூரியில் சாதனை நிகழ்வு
/
கே.பி.ஆர்., கலை அறிவியல் கல்லூரியில் சாதனை நிகழ்வு
கே.பி.ஆர்., கலை அறிவியல் கல்லூரியில் சாதனை நிகழ்வு
கே.பி.ஆர்., கலை அறிவியல் கல்லூரியில் சாதனை நிகழ்வு
ADDED : ஜன 31, 2024 11:35 PM

சூலூர் : கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில், ஹேக்கத்தான் -2024 நிகழ்ச்சி நடந்தது.
கோவை கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி, ஸ்டார்ட்அப் டிஎன் மற்றும் காக்னிசண்ட் அமைப்பு சார்பில், 'சோசியோ டெக் ஹேக்கத்தான்- 2024'நிகழ்ச்சி நடந்தது.
இதில், ஒடிசா, மகாராஷ்டிரா,மேற்கு வங்கம், ஆந்திரா பாண்டிச்சேரி, மற்றும் தமிழகத்தை சேர்ந்த, 56 கல்லூரிகளை சேர்ந்த, 733 மாணவ, மாணவியர், 177 குழுக்களாக பங்கேற்றனர்.
கல்லூரி முதல்வர் கீதா தலைமை வகித்து பேசுகையில், எங்கள் கல்லூரியுடன் இணைந்து தொழில் நுட்ப பயணத்தை துவக்கியுள்ள உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள், என்றார்.
கோவை மாநகராட்சி ஐ.சி.சி.சி மைய அதிகாரி சங்கர், ஸ்டார்ட்அப் டிஎன் திட்ட தலைவர் காயத்ரி, ராஜசேகர் ஆகியோர் பங்கேற்றனர். 24 மணி நேரம் தொடர்ந்து நடந்த இந்நிகழ்வு, மூன்று சுற்றுகளாக நடந்தது.
மாணவர்களின் கணினி பயன்பாடு மற்றும் மென்பொருள், வன் பொருள் பயன்பாட்டு திறனை வெளிப்படுத்தும் களமாக இந்நிகழ்வு கல்லூரி நிர்வாகத்தால் நடத்தப்பட்டது.