/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குளமாக மாறிய சாலை; வாகனங்கள் செல்வதில் சிரமம்
/
குளமாக மாறிய சாலை; வாகனங்கள் செல்வதில் சிரமம்
ADDED : அக் 03, 2024 11:48 PM

கோத்தகிரி : கோத்தகிரி ஒன்னதலை கோவில் மேடு சாலை சீரமைக்காததால், மழைநீர் தேங்கி குளமாக மாறி, வாகனங்கள் சென்று வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஊட்டி ஊராட்சி ஒன்றியம், கக்குச்சி ஊராட்சியில் ஒன்னதலை கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் இருந்து, கோவில் மேடு வழியாக, தங்கள் தேவைகளுக்காக பகுதி மக்கள், நாள்தோறும் சென்று வருகின்றனர்.
ஒரு கி.மீ., தொலைவில் அமைந்துள்ள இச்சாலை, கடந்த,10 ஆண்டுகளுக்கு மேலாக, சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால், அரை கி.மீ., தொலைவில் பகுதி சாலையில் குழிகள் ஏற்பட்டு, மழைநீர் தேங்கி, குளம் போல் மாறி உள்ளது.
வாகனங்கள் மற்றும் மக்கள் சென்று வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.குறிப்பாக, பள்ளி வாகனங்கள் சிரமத்திற்கு இடையே இயக்கப்பட வேண்டிய நிலை உள்ளது. இப்பகுதி விவசாயிகள், விளைப் பொருட்களை, கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம், சாலையை சீரமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

