/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முதல்வரின் காலை உணவு திட்டத்தின் தரம் குறித்து ஆய்வு
/
முதல்வரின் காலை உணவு திட்டத்தின் தரம் குறித்து ஆய்வு
முதல்வரின் காலை உணவு திட்டத்தின் தரம் குறித்து ஆய்வு
முதல்வரின் காலை உணவு திட்டத்தின் தரம் குறித்து ஆய்வு
ADDED : அக் 21, 2024 06:14 AM
ஊட்டி, : முதல்வரின் காலை உணவு திட்டத்தில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
அரசின் நலத்திட்டங்கள், சேவைகள் தடையின்றி விரைவாக மக்களை சென்றடையும் வகையில், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' என்ற புதிய திட்டம் சமீபத்தில் நடைமுறைக்கு வந்தது. இதன்படி, முகாம் நடைபெறும் வட்டம் குறித்த தகவல், முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும்.
கள ஆய்வின்போது பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில், மக்களுக்கு மேம்பட்ட சேவைகளை வழங்குதல், திட்டங்களை விரைவுபடுத்துதல் தொடர்பாக கலெக்டர் உரிய தீர்வு எடுப்பார்.
இந்நிலையில், ஊட்டி தாலுகாவில் இந்த திட்டத்தின் கீழ், பல இடங்களுக்கு சென்று கலெக்டர் நேரில் ஆய்வு செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, ஊட்டியில் உள்ள நகராட்சி பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டத்தின் கீழ், மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.
மேலும், உணவை உட்கொண்டு பார்த்து, ஆரோக்கியமான உணவை குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக கொடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷாவிடம் கூறினார். முடிவில், கற்றல் முறைகள் எவ்வாறு உள்ளது என மாணவ-, மாணவிகளிடம் கேட்டறிந்து, படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினார்.