தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/புத்தூர் வயலில் வனத்தீ :கட்டுப்படுத்துவதில் திணறல்

புத்தூர் வயலில் வனத்தீ :கட்டுப்படுத்துவதில் திணறல்

புத்தூர் வயலில் வனத்தீ :கட்டுப்படுத்துவதில் திணறல்


ADDED : பிப் 12, 2024 01:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2024 01:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலுார்;கூடலுார் புத்துார் வயல் அருகே, ஏற்பட்ட வனத்தீயை, தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி கட்டுப்படுத்தினர்.

கூடலுார் பகுதியில், கோடைக்கு முன்பாக வறட்சியின் தாக்கம் அதிகரித்து தாவரங்கள், புற்கள் கருகி வருகின்றன. பல பகுதிகளில் வனத்தீ அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், புத்துார் வயல் அருகே தோட்டத்தில் நேற்று மதியம் 2:00 மணிக்கு திடீரென வனத்தீ ஏற்பட்டது. தகவல் அறிந்து சென்ற வன ஊழியர்கள் அதனை கட்டுப்படுத்த முயன்றனர். தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

கூடலுார் தீயணைப்பு வீரர்கள், அப்பகுதிக்கு சென்று தண்ணீரை பாய்ச்சி, இரண்டு மணி நேரம் போராடி வனத்தீயை கட்டுப்படுத்தினர். ஒரு ஏக்கருக்கு மேற்பட்ட புல்வெளிகள் எரிந்து சாம்பலானது.

இப்பகுதியில், ஏற்பட்ட வனத்தீ முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் பரவுவதை தடுக்கும் வகையில், கார்குடி வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us