/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பூ குண்டம் திடலில் நான்கு மாதத்திற்கு பின் திடீரென தீ எரிந்ததால் பரபரப்பு

ADDED : ஆக 19, 2025 09:15 PM

குன்னுார்:
குன்னுார் மார்க்கெட் பகுதியில் உள்ள பூ குண்டம் நடந்த இடத்தில், 4 மாதங்களுக்கு பிறகு தீ மீண்டும் எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குன்னுார் தந்தி மாரியம்மன் சித்திரை தேர் திருவிழாவையொட்டி, கடந்த ஏப்.,13ல் பூகுண்டம் திருவிழா மார்க்கெட் குண்டம் திடலில் நடந்தது. தீ குண்டத்தை சுற்றி வேலி அமைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று பூ குண்டத்தினுள் இருந்து திடீரென தீ பரவி புகை எழுந்துள்ளது. இதனை காண வியாபாரிகள் மற்றும் மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே, தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர், பக்தர்கள் பலரும் திரண்டு வழி பட்டும் சென்றனர்.
குண்டம் நடந்து, நான்கு மாதங்களில் பெரும்பாலான நாட்கள் மழை பெய்த நிலையில், தற்போது அப் பகுதியில் திடீரென தீ எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் கூறுகையில், 'அப்பகுதியில் குண்டம் நடந்த போது மண் கொட்டப்படாமல் தீ கனல் உள்ளே இருந்ததால் திடீரென எரிந்துள்ளது. இதனால், பாதிப்பு இல்லை,' என்றனர்.