/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வீட்டிற்குள் திடீர் தீ பொருட்கள் எரிந்து நாசம்
/
வீட்டிற்குள் திடீர் தீ பொருட்கள் எரிந்து நாசம்
ADDED : பிப் 16, 2024 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்:குன்னார் வெலிங்டன் குரூஸ்பெட் பகுதியில் வீட்டிற்குள் ஏற்பட்ட தீயால் பொருட்கள் எரிந்து சேதமாகின.
நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் குரூஸ் பெட் பகுதியை சேர்ந்தவர் பாஷா என்கிற பாஸ்கர். இவரது வீட்டில் இருந்து புகை வருவதை அறிந்த மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
குன்னுார் தீயணைப்பு துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள் தீயை அணைத்தனர். உடனடியாக வீட்டிற்கு செல்லும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. எனினும் கட்டில், படுக்கை உட்பட பல பொருட்கள் நாசமாகின.
தீ பிடித்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.