/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இருக்கை இல்லாத நிழற்குடை; பயணிகள் அமர முடியாத நிலை
/
இருக்கை இல்லாத நிழற்குடை; பயணிகள் அமர முடியாத நிலை
இருக்கை இல்லாத நிழற்குடை; பயணிகள் அமர முடியாத நிலை
இருக்கை இல்லாத நிழற்குடை; பயணிகள் அமர முடியாத நிலை
ADDED : ஜூலை 21, 2025 08:56 PM

கோத்தகிரி; கோத்தகிரி கட்டபெட்டு பவர்ஹவுஸ் பயணியர் நிழற்குடையில், இருக்கைகள் இல்லாததால், பயணிகள் அமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது
கோத்தகிரி -- குன்னுார் இடையே கட்டபெட்டு பவர் ஹவுஸ் பகுதி அமைத்துள்ளது. இங்கு, மின் அலுவலகம் உட்பட, அலுவலர்களின் குடியிருப்புகள் உள்ளன.
ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட இப்பகுதி நிழற்குடையை, மழை மற்றும் வெயில் நாட்களில், கட்டபெட்டு, நடுஹட்டி, ஆருவ ஒசஹட்டி, ஒன்னோரை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த நுாற்று கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இங்கு அமைக்கப்பட்டிருந்த 'ஸ்லாப்' இருக்கைகள் திருடப்பட்டுள்ளது. இதனால், தற்போது இருக்கைகள் இல்லாததால், மழை மற்றும் வெயில் நாட்களில் பயணிகள் அமர முடியாமல் அவதிப்படுகின்றனர்.
எனவே, பயணியர் நலன் கருதி, இருக்கைகள் அமைக்க சம்பந்தப்பட்ட நிர்வாகம், நடவடிக்கை எடுப்பது அவசியம்.

