/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கேரளா சென்ற லாரி கவிழ்ந்தது விபத்து
/
கேரளா சென்ற லாரி கவிழ்ந்தது விபத்து
ADDED : பிப் 22, 2024 06:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: கர்நாடக மாநிலம் மைசூருவிலிருந்து, அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் ஏற்றிய லாரி, கூடலூர் வழியாக, நேற்று கேரள மாநிலம் எர்ணாகுளம் நோக்கி வந்தது. மதியம், 1:30 மணிக்கு, கூடலுாரை கடந்து கேரளா நோக்கி சென்ற லாரி, பள்ளிப்படி அருகே வளைவான பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. விபத்தில், கேரளா வழிகடவு பகுதியை சேர்ந்த டிரைவர் சமநாத், 29, காயமின்றி உயிர் தப்பினார்.
விபத்து காரணமாக, அப்பகுதியை வாகனங்கள் கடந்து செல்ல சிறிது நேரம் சிரமம் ஏற்பட்டது. போலீசார் மற்றும் போக்குவரத்து சீரமைத்து, வாகனங்கள் செல்ல உதவினர். கூடலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.