/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடியிருப்பு பகுதியில் முகாமிட்ட கட்டை கொம்பன் யானை
/
குடியிருப்பு பகுதியில் முகாமிட்ட கட்டை கொம்பன் யானை
குடியிருப்பு பகுதியில் முகாமிட்ட கட்டை கொம்பன் யானை
குடியிருப்பு பகுதியில் முகாமிட்ட கட்டை கொம்பன் யானை
ADDED : நவ 26, 2024 10:10 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே சேரங்கோடு பகுதியில், டான்டீ தேயிலை தோட்டம் மற்றும் தொழிலாளர்கள் குடியிருப்புகள் அமைந்துள்ளது.
இந்த பகுதியில் அடிக்கடி யானைகள் உலா வரும் நிலையில், கட்டைகொம்பன் என்று அழைக்கப்படும் யானை, குடியிருப்புகளுக்கு முன்பாக 'ஹாயாக' நடந்து வந்துள்ளது.
இதனை பார்த்த தொழிலாளர்கள், வீடுகளுக்குள் ஓடி கதவுகளை பூட்டி கொண்டு உயிர் தப்பினர். அங்குள்ள புற்களை பறித்து உணவாக உட்கொண்டு நிதானமாக, குடியிருப்புகள் சரியாக நடந்து தேயிலை தோட்டத்திற்குள் புகுந்து சென்றது.
இதேபோல், ஏலியாஸ் கடை பகுதியில், மூன்று யானைகள் முகாமிட்டன. மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த நிலையில், மேக கூட்டம் வந்ததால் யானைகள், மேகத்தை ரசித்தபடி மலையில் ஏறி சென்றது. இந்த காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இப்பகுதியை சுற்றி யானைகள் உலா வருவதால், வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.