/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுற்றுலா பயணிகளை வசீகரிக்கும் காட்டேரி பூங்கா
/
சுற்றுலா பயணிகளை வசீகரிக்கும் காட்டேரி பூங்கா
ADDED : அக் 31, 2024 09:19 PM
குன்னுார்; குன்னுார் காட்டேரி பூங்காவில் இரண்டாம் சீசனுக்கு நடவு செய்த மலர்கள் வண்ண மயமாக பூத்து சுற்றுலா பயணிகளை வசீகரித்து வருகிறது.
குன்னுார்- மேட்டுப்பாளையம் மலைபாதையில் அமைந்துள்ள காட்டேரி பூங்கா, பசுமை சூழ்ந்த மலைகள், தேயிலை தோட்டம் மற்றும் நீர்வீழ்ச்சி, ரன்னி மேடு ரயில் நிலையம் ஆகியவற்றின் இடையே வண்ண மயமாக அமைக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது சீசன் துவங்கியுள்ள நிலையில் ஏற்கனவே நடவு செய்யப்பட்ட, 'மெரிகோல்டு, சால்வியா, காஸ்மாஸ், பெகோனியா உட்பட, 20க்கும் மேற்பட்ட வகைகளில் நடவு செய்யப்பட்ட மலர்கள் பூத்து குலுங்குகிறது.
இங்கு வரும் சுற்றுலா பயணிகளை இந்த மலர்கள் வெகுவாக கவர்ந்து வருகிறது. நுழைவு கட்டணம் அதிகம் உயர்த்தப்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை சற்று குறைந்துள்ளது. பள்ளி, கல்லுாரியில் இருந்து கல்வி சுற்றுலா வரும் மாணவ, மாணவிகளுக்கு கட்டண சலுகைகள் அறிவித்தால் கூடுதல் பயணிகள் வருகை தர வாய்ப்புள்ளது.