/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடிநீர் வசதி இல்லாத கிராமம் திண்டாடும் கிராம மக்கள்
/
குடிநீர் வசதி இல்லாத கிராமம் திண்டாடும் கிராம மக்கள்
குடிநீர் வசதி இல்லாத கிராமம் திண்டாடும் கிராம மக்கள்
குடிநீர் வசதி இல்லாத கிராமம் திண்டாடும் கிராம மக்கள்
ADDED : ஜன 18, 2024 01:48 AM

பந்தலுார் : பந்தலுார் அருகே காரைக்கொல்லி பகுதியில், கூடலுார் ஊராட்சி ஒன்றியம் சார்பில், 106 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டன. வீடு வசதி இல்லாத ஏழைகள் மற்றும் டான்டீயில் பணியாற்றி ஓய்வு பெற்று, வீடு வசதி இல்லாதவர்களுக்கு இந்த பகுதியில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த கிராமத்து மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய, போதிய குடிநீர் திட்டம் கொண்டு வரப்படவில்லை.
இதனால் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
கூலி வேலைக்கு செல்லும் இப்பகுதி மக்கள், வேலைக்கு சென்று மாலை நேரத்தில் வீடு திரும்பும் நிலையில், தண்ணீர் கிடைக்காமல் திண்டாடும் நிலை தொடர்கிறது.
மேடு பாங்கான பகுதியில் வீடுகள் அமைந்துள்ள நிலையில், வேறு பகுதிக்கு சென்று குடிநீர் கொண்டு வரவும் முடியாத சூழலில் சிரமப்பட்டு வருகின்றனர்.
கிராம மக்கள், 'தங்கள் கிராமத்திற்கு தனியாக குடிநீர் திட்டம் நிறைவேற்றி தர வேண்டும்,' என, தொடர்ந்து வலியுறுத்தியும், அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
மக்கள் கூறுகையில், 'தற்போதுள்ள சூழல் தொடர்ந்தால், எதிர்வரும் கோடை காலத்தில் குடிப்பதற்கு கூட போதிய தண்ணீர் இல்லாமல் திண்டாடும் நிலை ஏற்படும். இதனால், அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.