sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 காட்சி பொருளாக மாறி வரும் நீர் தொட்டி

/

 காட்சி பொருளாக மாறி வரும் நீர் தொட்டி

 காட்சி பொருளாக மாறி வரும் நீர் தொட்டி

 காட்சி பொருளாக மாறி வரும் நீர் தொட்டி


ADDED : பிப் 05, 2026 06:18 AM

Google News

ADDED : பிப் 05, 2026 06:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்: பந்தலுார் அருகே சேரங்கோடு மற்றும் நெலாக்கோட்டை ஊராட்சிகளில், பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட நீர் தேக்க தொட்டிகள் காட்சி பொருளாக மாறி வருகிறது.

கிராமப்புற மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் வகையில், கூடலுார் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, நெலாக்கோட்டை மற்றும் சேரங்கோடு ஊராட்சி பகுதிகளில், தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டன.

அதில், 15வது நிதி குழு மானியத்தின் கீழ் தலா, 4.5 லட்சம் ரூபாய் செலவில் நீர்த்தேக்க தொட்டிகள் மட்டும் கட்டப்பட்டு அதற்கான குடிநீர் குழாய் மற்றும் கிணறுகள் அமைக்காத நிலையில், இரண்டு ஊராட்சிகளிலும் பல லட்சம் ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. தொட்டிகள் மட்டுமே கட்டப்பட்டுள்ள நிலையில், இவைகள் காட்சி பொருளாக மாறி, பயனின்றி காணப்படுகிறது.

மக்கள் கூறுகையில், 'இந்த தொட்டிகள் அமைப்பதற்காக தனிநபர்கள் பலரும், தங்கள் நிலத்தை இலவசமாக வழங்கி உள்ள நிலையில், இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி, கிராமப்புற மக்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டியது அவசியம் ஆகும். இல்லையெனில், இந்த தொட்டி வீணாகிவிடும் நிலை உள்ளது,' என்றனர்.






      Dinamalar
      Follow us