நெல்லியாம்பதியில் பலாப்பழம் தேடி வரும் காட்டு யானை
நெல்லியாம்பதியில் பலாப்பழம் தேடி வரும் காட்டு யானை
ADDED : ஜூன் 16, 2026 07:11 AM

அ நிறம் | அளவு
பாலக்காடு: ஒவ்வொரு ஆண்டும் பலாப்பழ சீசன் ஆரம்பிக்கும்போது, பாலக்காடு நெல்லியாம்பதியில் உள்ள கூனம்பாலம் பகுதிக்கு, காட்டு யானை ஒன்று வருவது வழக்கம்.
அங்குள்ள பலாப்பழங்களைச் சாப்பிட்டு விட்டு, யாருக்கும் எந்த தொந்தரவும் செய்யாமல் அமைதியாகத் திரும்பிச் செல்லும். பலாப்பழத்தின் மீதுள்ள இந்தத் தனிப்பாசத்தின் காரணமாகவே, உள்ளூர் மக்கள் இந்த யானைக்கு 'சக்கக்கொம்பன்' (பலாப்பழ ஒற்றையானை) என்று அன்போடு பெயரிட்டுள்ளனர்.
வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வரும் இந்த யானை, மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தாமல் ஒரு வேடிக்கையான காட்சியாகவே பார்க்கப்படுகிறது.
