/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோல்ப் போட்டியில் முதலிடம்; ஊட்டியை சேர்ந்த பெண் சாதனை
/
கோல்ப் போட்டியில் முதலிடம்; ஊட்டியை சேர்ந்த பெண் சாதனை
கோல்ப் போட்டியில் முதலிடம்; ஊட்டியை சேர்ந்த பெண் சாதனை
கோல்ப் போட்டியில் முதலிடம்; ஊட்டியை சேர்ந்த பெண் சாதனை
ADDED : பிப் 12, 2025 10:58 PM

ஊட்டி; தேசிய அளவிலான கோல்ப் போட்டியில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்ற ஊட்டியை சேர்ந்த ரியா பூர்விக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
ஊட்டி அருகே மேலுார் கிராமத்தை சேர்ந்தவர் ரியாபூர்வி.கோல்ப் விளையாட்டில் ஈடுபாடு கொண்ட இவர், தேசிய அளவில் பெண் களுக்கான கோல்ப் போட்டிகளில் பங்கேற்று விளையாடிவருகிறார்.
கடந்த ஜன., 10ம் தேதி டில்லியில் நடந்த தேசிய கோல்ப் போட்டியில், தமிழகத்திலிருந்து பங்கேற்ற ரிய பூர்வி, முதலிடத்தில் வெற்றி பெற்றார். ஊட்டிக்கு வந்த இவருக்கு, நீலகிரி மக்கள் சார்பில் பாராட்டு தெரிவிக்கும் விதமாக, 'ஊட்டி சிட்டிஷன் போரம்' சார்பில், முனைவர் பார்த்திபன் கேடயம் வழங்கினார். நிகழ்ச்சியில், அமைப்பின் தலைவர் வக்கீல் விஸ்வநாதன், செயலாளர் இமானுேவல், பொருளாளர் பிரவீன் நேத்தா உட்பட பலர் பங்கேற்றனர்.