/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையோரம் துாங்கியவரிடம் திருடிய வாலிபர் சிக்கினார்
/
சாலையோரம் துாங்கியவரிடம் திருடிய வாலிபர் சிக்கினார்
சாலையோரம் துாங்கியவரிடம் திருடிய வாலிபர் சிக்கினார்
சாலையோரம் துாங்கியவரிடம் திருடிய வாலிபர் சிக்கினார்
ADDED : அக் 28, 2025 11:56 PM
ஊட்டி: சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த நபரிடம் செல்போன் மற்றும் கவரிங் நகையை திருடிய வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊட்டி நகரில் நகராட்சி மார்க்கெட் அருகே மணிக்கூண்டு பகுதியில் எப்போதும் கூட்டமாக இருக்கும். மேலும் வாகன போக்குவரத்தும் இருப்பதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படும். அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகில் ஒரு நபர் சாலையோரம் படுத்திருந்தார்.
இதை நோட்டமிட்ட இளைஞர் ஒருவர் நீண்ட நேரம் அதே பகுதியில் சுற்றித்திரிந்த பின்பு அவரின் அருகில் சென்று அவரது பாக்கெட்டில் இருந்து செல்போன் மற்றும் கவரிங் நகையை திருடி சென்றார்.
அதனை கவனித்த சிலர் அந்த வாலிபரை பிடித்து ஊட்டி மத்திய போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் அந்த வாலிபரிடம் இருந்து, 328 ரூபாயை பறிமுதல் செய்த நிலையில் செல்போன் மற்றும் கவரிங் நகை பறிப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே வாலிபர் செல்போனை திருடி செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிஉள்ளது.

