/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு இரட்டை ஆயுள்
/
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு இரட்டை ஆயுள்
ADDED : ஆக 01, 2025 07:44 PM
ஊட்டி; கோத்தகிரியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு, 17 வயதில் மூளை வளர்ச்சி குன்றிய ஒரு மகள் உள்ளார். கணவர் இறந்து விட்டதால் சிறுமியின் தாய் தனது பெற்றோர் பராமரிப்பில் விட்டு திருப்பூரில் தங்கி கட்டட வேலைக்கு சென்று வந்தார்.
வாரந்தோறும் கோத்தகிரிக்கு வந்து தனது மகளை பார்த்து செல்கிறார். சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
சிறுமியின் பாட்டி அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார். சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது வீட்டுக்கு அடிக்கடி வந்த, 25 வயதான உறவினர், கட்டாயப்படுத்தி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து புகாரின் பேரில், குன்னுார் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில், வாலிபரை கைது செய்தனர். இவ்வழக்கு ஊட்டி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று முன்தினம் இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதில், குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, நீதிபதி செந்தில்குமார் தீர்ப்பளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாநில அரசிடம் இருந்து, 3 லட்சம் ரூபாய் இழப்பீடு பெற்று வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பி.செந்தில்குமார் ஆஜராகி வாதாடினார். தொடர்ந்து, முத்துக்குமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.