/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரம் பொங்கல் திருவிழா
/
மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரம் பொங்கல் திருவிழா
ADDED : ஜூலை 28, 2025 08:50 PM

கோத்தகிரி; கோத்தகிரி கடைவீதியில் மாரியம்மன் திருக்கோவிலில் ஆடிப்பூரம் திருவிழா நேற்று சிறப்பாக நடந்தது.
ஆண்டுதோறும், மாரியம்மன் கோவிலில், ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை உட்பட, ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று காலை, 7:00 மணி முதல், கோத்தகிரி பகுதியில் வசிக்கும் அனைத்து மகளிர்களும் ஒருங்கிணைந்து தனித்தனியாக, வேண்டுதலுக்கு ஏற்ப பொங்கல் வைத்து விழாவை கொண்டாடினர்.
காலை, 10:00 மணிக்கு, கடைவீதி அருள்மிகு சித்தி விநாயகர் கோவிலில் இருந்து, அம்மனுக்கு சீர்வரிசை ஊர்வலமும், தொடர்ந்து திருமஞ்சள் ஊர்வலமும் நடந்தது.
தொடர்ந்து, அம்மனுக்கு அலங்கார சிறப்பு பூஜை நடத்தப்பட்டதை அடுத்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, காணிக்கை செலுத்தி அம்மனை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை மாரியம்மன் கோவில் தலைவர் மற்றும் வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.