/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அப்துல் கலாம் நினைவு தினம்; பல இடங்களில் அனுஷ்டிப்பு
/
அப்துல் கலாம் நினைவு தினம்; பல இடங்களில் அனுஷ்டிப்பு
அப்துல் கலாம் நினைவு தினம்; பல இடங்களில் அனுஷ்டிப்பு
அப்துல் கலாம் நினைவு தினம்; பல இடங்களில் அனுஷ்டிப்பு
ADDED : ஜூலை 27, 2025 09:38 PM

குன்னுார்; முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின், 10வது ஆண்டு நினைவு தினம், மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் அனுஷ்டிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பு சார்பில், குன்னுார், கோத்தகிரி, ஊட்டி பகுதிகளில் நடந்த நினைவு தின நிகழ்ச்சிகளில், கலாம் நினைவு அறக்கட்டளை கூட்டமைப்பு செயலாளர் வினோத்குமார் தலைமை வகித்து, அப்துல் கலாமின் சிறப்புகள் குறித்து பேசினார்.
குன்னுார் அண்ணா சிலை அருகே அறக்கட்டளை ஒருங்கிணைப்புடன் நடந்த நிகழ்ச்சியில் கூட்டமைப்பு கவுரவ தலைவர் ராமகிருஷ்ணன், நிர்வாகி கோவர்த்தனன், குன்னுார் வட்டார ஒருங்கிணைப்பாளர் சாதிக் முன்னிலை வகித்தனர்.
ஊட்டி அரசு கலை கல்லுாரி யூத் ஹாஸ்டல் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கூட்டமைப்பு நிர்வாகி ரஞ்சித், உயிர் காற்று அறக்கட்டளை நிர்வாகி சுதாகர் ஏற்பாடுகளை செய்தனர்.
குன்னுார் அரசு மருத்துவமனையில் பெண்கள் அதிகளவில் பங்கேற்று ரத்த தானம் வழங்கினர். 10ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சிக்காக, இளம் தலைமுறையினரை சேவை என்னும் பாதையில் அழைத்துச் செல்ல, மாணவர் குழுவை உருவாக்கி, அதன் பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டது.