/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சேதமான தடுப்பு சுவரால் விபத்து அபாயம்; தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்குமா ?

ADDED : ஏப் 09, 2025 10:00 PM

ஊட்டி; 'ஊட்டி -- குன்னுார் சாலையில் கேத்தி சந்திப்பில் பாதிக்கப்பட்டுள்ள தடுப்பு சுவரை உடனடியாக சீரமைக்க வேண்டும்,' என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஊட்டி - குன்னுார் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பஸ், தனியார் வாகனங்கள் சென்று வருகிறது. குன்னுாரில் இருந்து ஊட்டி வரை தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்கம், ஆங்காங்கே சாலையோர தடுப்பு சுவர், மழைநீர் கால்வாய் என, பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது.
அதில், கேத்தி சந்திப்பில், 10 அடி துாரத்தில் பழைய தடுப்பு சுவர் சரிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், தடுப்பு சுவர் விழும் நிலையில் உள்ள அபாயத்தாலும், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலை துறையினருக்கு வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலை துறையினர் விரைவில் ஆய்வு மேற்கொண்டு அப்பகுதியில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.