/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாணவி பலாத்கார வழக்கில் ஆந்திராவில் பதுங்கிய குற்றவாளி கைது
/
மாணவி பலாத்கார வழக்கில் ஆந்திராவில் பதுங்கிய குற்றவாளி கைது
மாணவி பலாத்கார வழக்கில் ஆந்திராவில் பதுங்கிய குற்றவாளி கைது
மாணவி பலாத்கார வழக்கில் ஆந்திராவில் பதுங்கிய குற்றவாளி கைது
ADDED : ஜன 07, 2025 11:51 PM
ஊட்டி; மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஆந்திராவில் பதுங்கி இருந்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
ஊட்டி அருகே வசிக்கும் தம்பதியின், 16 வயது மகள் கடந்த நவ., 10ம் தேதி தன்னுடைய தோழிகளை பார்க்க செல்வதாக கூறிவிட்டு வெளியில் சென்று, வீடு திரும்பவில்லை. தேனாடு கம்பை போலீஸ் ஸ்டேஷனில் பெற்றோர் புகார் அளித்தனர். இந்நிலையில், மூன்று நாட்கள் கழித்து மாணவி வீட்டுக்கு வந்துள்ளார்.
விசாரணையில், 'முகநுால் மூலம் அறிமுகமான மேட்டுப்பாளையத்தை சேர்ந்த காஜா மொய்தீன் என்பவர் தன்னுடைய வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்,' என, விசாரணையில் தெரியவந்தது. அதில், 6 பேரை போக்சோ  சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, வழக்கு ரூரல் மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டு, இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் தலைமையில் மீண்டும் விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில், இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியாக இருந்த காஜா மொய்தீன் குடும்பத்துடன் ஆந்திரா மாநிலத்திற்கு தப்பி சென்று தலைமறைவாகி உள்ளார். மொபைல் போன் சிக்னல் அடிப்படையில், ஆந்திராவுக்கு சென்ற தனிப்படை போலீசார், அங்கு அவரை கைது செய்து, நேற்று முன்தினம் ஊட்டிக்கு அழைத்து வந்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர் விசாரணை நடந்து வருகிறது.

