ADDED : ஆக 29, 2025 09:11 PM
குன்னுார்; குன்னுார் நகராட்சி கூட்டம், தலைவர் சுசீலா தலைமையில், பொறியாளர் வேலுச்சாமி முன்னிலையில் நடந்தது.
'மார்க்கெட் கடைகள் இடித்து கட்ட, கடைகள் காலி செய்ய, ஐகோர்ட் உத்தரவிட்ட நிலையில், தீபாவளி, பொங்கல் விடுமுறை வரை கால அவகாசம் வழங்க வேண்டும்,' என, பல கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
தொடர்ந்து, கவுன்சிலர் மணிகண்டன் பேசுகையில்,''மன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்பட்டு, மாநிலத்தில் எங்கும் இல்லாத அளவு இங்கு, 100 சதவீத வரியை உயர்த்துகின்றனர். கட்டட பணிகள் நடக்கும் இடத்தில், கமிஷனர் இளம்பரிதி உட்பட சில அதிகாரிகள் சென்று லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்துள்ளது.
குப்பைகள் சேகரிக்கும் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க கூட்டத்தில் கூறியும், குறிப்பிட்டவர்களுக்கு வழங்க கமிஷனர், நகராட்சி தலைவி கையெழுத்திடுகின்றனர். அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்துகின்றனர்,'' என்றார். இதனால் பரபரப்பு ஏற் பட்டது.

