/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீரில் மூழ்கிய பல ஏக்கர் விவசாய நிலம்; கனமழையால் விவசாயிகள் கவலை
/
நீரில் மூழ்கிய பல ஏக்கர் விவசாய நிலம்; கனமழையால் விவசாயிகள் கவலை
நீரில் மூழ்கிய பல ஏக்கர் விவசாய நிலம்; கனமழையால் விவசாயிகள் கவலை
நீரில் மூழ்கிய பல ஏக்கர் விவசாய நிலம்; கனமழையால் விவசாயிகள் கவலை
ADDED : அக் 22, 2024 11:48 PM

ஊட்டி : ஊட்டி அருகே எம்.பாலாடா சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழையால், பல ஏக்கர் மலை காய்கறி தோட்டம் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வடகிழக்கு பருவ மழை எதிரொலியாக, நீலகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அவ்வப்போது கன மழையும் பெய்து வருகிறது. காலநிலையில் ஏற்பட்ட மாற்றத்தால் கடுங் குளிர் நிலவுகிறது.
நேற்று காலை அவ்வப்போது, ஆங்காங்கே இடியுடன் கனமழை பெய்தது. இதனால், ஊட்டி அருகே எம்.பாலாடா, கப்பத்தொரை, கல்லக்கொரை ஹாடா பகுதிகளில் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. கன மழைக்கு நீரோடை பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் மழை நீர் மலை காய்கறி தோட்டங்களை சூழ்ந்தது. அப்பகுதியில் பயிரிடப்பட்ட கேரட், முட்டை கோஸ், பீட்ரூட், உருளை கிழங்கு உள்ளிட்ட மலை காய்கறிகள் நீரில் மூழ்கின.
விவசாயிகள் கூறுகையில், 'எம். பாலாடா சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரம் கன மழை பெய்தது. இங்கு பல ஏக்கரில் பயிரிடப்பட்ட மலை காய்கறிகள் நீரில் மூழ்கின. விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தோட்டக்கலை துறையினர் ஆய்வு மேற்கொண்டு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.