/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பராமரிப்பு இல்லாத நேதாஜி பூங்கா துாய்மை படுத்த நடவடிக்கை அவசியம்
/
பராமரிப்பு இல்லாத நேதாஜி பூங்கா துாய்மை படுத்த நடவடிக்கை அவசியம்
பராமரிப்பு இல்லாத நேதாஜி பூங்கா துாய்மை படுத்த நடவடிக்கை அவசியம்
பராமரிப்பு இல்லாத நேதாஜி பூங்கா துாய்மை படுத்த நடவடிக்கை அவசியம்
ADDED : ஜன 29, 2025 10:43 PM

ஊட்டி; 'ஊட்டியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பூங்காவை பராமரிக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது.
ஊட்டி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பூங்காவில் நடந்த நிகழ்ச்சியில், மக்கள் விழிப்புணர்வு இயக்க தலைவர் சமூக ஆர்வலர் ஜனார்த்தனன் தலைமை வகித்து பேசுகையில், ''சுபாஷ் சந்திர போசின் தன்னலமற்ற சேவைகள் மக்கள் மனங்களில் இடம் பிடித்துள்ளது. அவரது நினைவாக, ஊட்டியில் அமைந்துள்ள திடல், மகாத்மா காந்தி முதல், முக்கிய தலைவர்கள் பங்கேற்ற மேடையாகவும், சிறந்த பூங்காவாகவும் விளங்கி வருகிறது.
தற்போது, இந்த பூங்கா சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. நகராட்சி நிர்வாகம் பராமரிக்க முன்வர வேண்டும். அல்லது தனியார் பராமரிக்க வழிவகை ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.
மக்கள் கூறுகையில்,' காமராஜர், எம்.ஜி.ஆர்., உள்ளிட்ட தலைவர்கள் பிரசார மேடையாக பயன்படுத்திய இப்பூங்காவில் மக்கள் பார்வைக்காக, தலைவர்களின் வருகை குறிப்புகள் குறித்த தகவல் பலகைகள் வைப்பது அவசியம்,' என்றனர். தொடர்ந்து, துாய்மை பணி நடந்தது.