தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ அழிந்து வரும் மலபார் அணில் பாதுகாப்பு நடவடிக்கை அவசியம்

அழிந்து வரும் மலபார் அணில் பாதுகாப்பு நடவடிக்கை அவசியம்

அழிந்து வரும் மலபார் அணில் பாதுகாப்பு நடவடிக்கை அவசியம்


ADDED : ஜன 24, 2025 09:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2025 09:47 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பந்தலுார், ;நீலகிரி மாவட்டத்தில் காணப்படும் அரிய வகை மலபார் அணில்கள் அழிவின் பிடியில் உள்ளதால், அவற்றை காக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

வன பெருக்கத்துக்கு காரணமாக உள்ள அணில்கள், உலக அளவில், 280 வகைகளும், நம் நாட்டில், 40 வகையான அணிகளும் உள்ளன. அதில், நம் மாநிலத்தில் மூன்று வகைகள் உள்ளன. குறிப்பாக, கிராமங்களில், பனை அணில், சாம்பல் நிற அணில், மலபார் அணில் ஆகியவை உள்ளன. சாம்பல் நிற அணில் தமிழகத்தின் ஸ்ரீவில்லிபுத்துார் பகுதியில் அதிகளவில் உள்ளதால் அங்கு சரணாலயம் அமைக்கப்பட்டு உள்ளது.

அணில் குடும்பத்தில் பெரியதாக காணப்படும், இந்தியன் மலபார் அணில்கள் செம்மை நிறத்தில் காணப்படும். இந்த அணில்கள், உயரமான மரத்தில் கூடு கட்டி வாழ்வதுடன், மரத்தில் கிடைக்கும் பழங்கள் மற்றும் மர பட்டைகள், இலைகளின் துளிர்கள், பறவைகளின் முட்டைகள் போன்றவற்றை உணவாக்கி கொள்கின்றன.

மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் அதிக அளவில் காணப்பட்டு வந்த இந்த அணில்கள், வனங்கள் அழிவு மற்றும் மரக்கடத்தல் போன்ற காரணங்களால் உணவு மற்றும் இருப்பிடம் இல்லாமல் அழிந்து வருகிறது.

தற்போது, பந்தலுார் சுற்றுவட்டார, வனப்பகுதிகளில் சில இடங்களில் மட்டும் இவை வாழ்ந்து வருகின்றன, மரங்களின் அழிவால், சிறுத்தை மற்றும் ஆந்தைகளால் அதிகளவில் கொல்லப்படுகின்றன.

வன உயிரின ஆர்வலர்கள் கூறுகையில்,''மலபார் அணில்கள் உட்கொள்ளும், பழங்களின் விதைகளை மண்ணில் போடுவதன் மூலம் வனப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் பெருக்கம் அடையும். வன பாதுகாப்புக்கு துணை புரியும் மலபார் அணில்களை பாதுகாக்க மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்பட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us