யானைகளை விரட்டும் கட்டுப்பாட்டு மையம் குறித்து செயல் விளக்கம்
யானைகளை விரட்டும் கட்டுப்பாட்டு மையம் குறித்து செயல் விளக்கம்
ADDED : மார் 26, 2026 10:21 PM

கூடலுார்: கூடலுார் காட்டு யானைகளை கண்காணித்து விரட்டுவதற்காக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு மையத்தின் செயல்பாடுகளுக்கு குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.
கூடலுார் ஆத்திகுன்னா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு, நாடுகாணி ஜீன்பூல் தாவர மையத்தில், சூழல் சுற்றுலா பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, வனவர்கள் சுரேஷ்குமார், சசிதரன், ஜின்பூல் ஊழியர்கள் கோமதி, சுந்தரேசன் ஆகியோர், ஜீன்பூல் தாவரம் மையத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கினர்.
தொடர்ந்து, யானைகளை கண்காணித்து விரட்டுவதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செயல்படும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் செயல்பாடுகள் குறித்து விளக்கினர். பள்ளி தலைமை ஆசிரியர் பாப்பாத்தி, ஆசிரியர் ஞானசேகரன், மாணவர்கள் பங்கேற்றனர்.
